பக்கம்:மங்கல மனைமாட்சி.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிள்ளை வளர்ப்பு பேராசிரியை திருவாட்டி கிருஷ்ணு சஞ்சீவி, எம்.ஏ., பி.டி. தமிழ்த்துறைத் தலைவர், மேரி அரசிக் கல்லூரி, சென்னை-4 காட்டின்-வீட்டின் உயிர் காட்டின் உயிர்-சமுதாயத்தின் அடிப்படைவீடு. அவ்வீட்டின் உயிர் குழந்தைகளே. கன் கலமாய மக்கட் பேற்றினைக் கொண்ட மங்கலமாய மனைமாட்சி சிறவாத எந்த நாடும் செழிப்புற்று இருக்க முடியாது. குடும்பத்தில்தான் வருங்காலத் தலைவர்களாகிய குழந்தைகள் தங்கள் வாழ்க்கை யின் ஆரம்ப நாட்களைக் கழிக்கின்றனர். அங் நாளில் அவர்களது பிஞ்சு உள்ளங்கள் பசுமரத் தானிபோலப் பழக்க வழக்கங்களை ஏற்றுக் கொள் கின்றன . எனவே குடும்பமே சமுதாயத்தின் செல்வங்களாகிய குழந்தைகளின் உடல்-உள்ள உயிர்ப் பண்புகளை உருவாக்கும் உலைக்களம். இந்தத் தலைமுறையில் குழந்தைகளாயிருப்ப வர்கள் அடுத்த தலைமுறையில் பெற்ருேர்களா யிருப்பர். இன்றைய குழந்தை நாளைய தங்தை!. இன்றைய குழந்தைகள் மனத் தெளிவையும் உடல் திண்மையையும் பொறுத்தே நாளைக்கு அவர்கட்