பக்கம்:மங்கல மனைமாட்சி.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 சைவ உணவுப் பொருள்களாகிய முருங்கைக் கீரை, அரைக்கீரை முதலியவற்றை உப்பிட்டுச் சாருக (ரசம்) வைத்தோ அல்லது சூப் (Soup) ஆக வைத்தோ அத் தண்ணிரைக் கொடுப்பது சிறங் தது. பாஸ்வரம், கால்சியத்தைச் சரிசெய்ய ஆறு மாதங்கட்குப் பிறகு சிறிது சிறிதாக வெண்ணெ யைச் சேர்த்துக் கொள்ளல் நலம. புரோட்டீன் (Protein) உடல் வளர்ச்சிக்கும் உடலில் சிதைந்த திசுக்களைப் (Tissues) புதுப் பிக்கவும் மிகவும் தேவை. முக்கியமாகச் சீரணப் பாதையில் பாக்டீரியாக்களால் ஏற்படும் பாதிப்பு களைப் புரோட்டினிலும், வைட்டமின் பீ-யிலும் உள்ள பெரிகாரிப் என்ற பொருள் தடுக்கிறது. இது கைக்குத்தல் அரிசியிலும் தவிடு நீக்கப்படாத அரிசியிலும் அதிகமாயுள்ளது. மேலும் அரிசியி லுள்ள மாவுப் பொருளில் (Starch) சிறிதளவு பாஸ்வரமும் இருக்கிறது. காம் பபன்படுத்தும் பருப்பு வகைகள், விதைகள் முதலியவற்றில் இளஞ்செடி தோன்றத் தேவையான சத்துப் பொருள் சேர்த்து வைக்கப் பட்டுள்ளன. தண்ணிரில் இவை ஊறினவுடன் அச் சத்துப் பொருள்கள் கரைந்து மாறுதலடைந்து இளஞ்செடி அச்சத்துக்களை ஏற்றுச் செரிக்கத்தக்க எளிய கிலையிலுள்ளது மேலும் முளை கிளம்பிய தானியங்களில் வைட்டமின் சி (Vitamin C) உள் எாது. எனவே அமில (Acid)த் தன்மையுடைய அரிசிச் சாதத்துடன் கார (Alkaline)த் தன்மை