பக்கம்:மங்கல மனைமாட்சி.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

73 குழந்தைகள் ஆடையின் இன்றியமையாமை யையும், அவற்றைத் துய்மையாய் வைத்துக் கொள்ள வேண்டுவதன் இன்றியமையாமையை யும் கன்ருக உணரும்படி செய்தல் வேண்டும். உயர்ந்த பட்டாடைகளை உடுத்தி அவற்றை அது கவனிப்புடன் பார்த்துக்கொள்ளும் என எதிர்பார்த் தல் கூடாது. மண், தண்ணிர் இவற்றருகே விளை யாடும் குழந்தைகட்கு எளிதில் சுத்தம் செய்யக் கூடிய உடைகளே உடுத்த வேண்டும். பழக்கம் காரணமாகக் குழந்தைகள் அழுக்குத் துணிகளை நீக்கித் துாய ஆடைகளை விரும்பக் கற்றுக்கொள் ளும். இதனுல் சுகாதார கல்வாழ்வு-உடல்நலப் பழக்கம் ஏற்படுவதன்றி அழுக்குக் கிருமிகளால் ஏற்படும் தீமைகளையும் நீக்க இயலும். உறையும் மனை நல்வாழ்விற்குச் சத்துள்ள உணவும் துய ஆடையும் எப்படி இன்றியமையாதனவோ அப்ப டியே ஒளியும் காற்றும் கிறைந்த வீடும் இன்றி யமையாதது. உண்னும் உணவும் உடுக்கும் உடையும் உறையும் உறையுளும் உலகத்து உயிர் களுக்கு எல்லாம் இன்றியமையாமல் தேவைப்படும் அடிப்படைகள் என்று முழங்குகிறது இரண்டா யிரம் ஆண்டுகட்கு முன்பு பிறந்த தமிழ் இலக்கிய மாகிய ம ணி மே க 2ல. ஆல்ை, நம் காட்டில் எல்லோர்க்கும் உண்ண உணவும், உடுக்க உடை யும், உறைய உறையுளும் கிடைக்கின்றனவா ? இல்லையே! சிலர்க்கு வாழ்வு; பலருக்குத் தாழ்வு.