பக்கம்:மங்கல மனைமாட்சி.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 இங்கிலே மாறிக் கவியரசர் கம்பர் பாடியதுபோல 'எல் லார்க்கும் எல்லாம் கிடைக்கப் பாடுபடுவதே. தொண்டு. அத்தொண்டை நாம் ஒவ்வொருவரும் செய்வோமாக இனி, வீடுபற்றி எண்ணுவோம். உணவு எளிய உணவாயினும் சத்துள்ள உணவாக இருக்க வேண்டும் என்றும் ஆடை கிழிந்ததாயினும் தூய தாய் இருக்கவேண்டும் என்றும் பார்த்தோம். அவ் வாறே வீடு சிறியதாயினும் வசதிகள் உடையதாய் இருக்கவேண்டும். சிறுகக் கட்டிக் பெருக வாழ்' என்பது பழமொழி. காற்று ஒளியும் இல்லாத வீட்டில் குடியிருக்கக் கூடாது. காற்றும் ஒளியும் இல்லாத வீட்டில் வளரும் குழந்தைகட்குப் பல வகை நோய்களும் வரும. எனவே, சன்னல்கள் பெரிதாக அமைந்துள்ள வீடுகளையே தேர்ந்து குடி யிருக்கவேண்டும். ஒளியும் காற்றும் வாழ்வுக்கு இரு கண்கள் போன்றவை. குழந்தைகள் வீட்டிற் குள்ளும் வீட்டின்முன்னும் பின்னும் உட்கார்ந்து படிக்கவும் ஒடியாடி விளையாடவும் வசதியுடைய வீடுகளே கல்ல வீடுகள், வீட்டு மாடி திறந்த மாடி யாக இருப்பின் மிகவும் கல்லது. காலையிலும் மாலையிலும் முறையே கதிரவன் தோன்றுவதையும் மறைவதையும் காண்பதாலும் இரவில் வானவெளி யைக் கூர்ந்து ஆராய்வதாலும் குழந்தைகளின் உடலும் உள்ளமும் கலங்கள் பலவும் பெறும். ஒரு வீட்டில் குறைந்தது படிப்பறை, படுக்கை யறை, வழிபாட்டைற, சமையலறை, குளியலறை,