பக்கம்:மங்கல மனைமாட்சி.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

81 பழக்கத்தின் பலம் பழக்கம் பலம் வாய்ந்தது. பார்க்குமிடத்து வாழ்க்கையே பழக்கங்களின் தொகுப்பும் பயனும் ஆகும். பழக்கத்தால் கோழி பாறையையும் கீறும் என்று சொல்வார்கள். எனவே குழந்தைகட்கு இளமைப் பருவத்திலேயே நல்ல பழக்க வழக்கங் கங்கள் ஏற்படச் செய்ய வேண்டும். அதற்குச் சிறந்த வழி பெரியவர்கள் கல்ல பழக்க வழக் கங்கள் உடையவர்களாய் இருப்பதேயாகும் தீமைக்கு இருக்கும் கவர்ச்சியும் ஆற்றலும் வியத் தற்கு உரிய வகையில் பெரியதாக உள்ளது. அது ஒரு இயற்கை விந்தை! அதனுல் குழந்தைகளின் கண்கள் தீயதைக் காணுமலும் காதுகள் தீயதைக் கேளாமலும் வாய் தீயதைப் பேசாமலும் பார்த்துக் கொள்ள வேண்டும். பயிரைப் பூச்சிகள் கெடுத்து விடுவதுபோலப் பிள்ளைகளைக் கெட்ட பழக் கங்கள் கெடுத்துவிடும். அது கேராதபடி சமு தாயப் பயிர்களாகிய குழந்தைகளைக் காப்பாற்ற வேண்டுவது ஆசிரியர்-பெற்ருேர்-பொதுமக்கள் கடமையாகும். விளையும் பயிர் முளையிலே', 'ஐந்தில் வ8ள யாதது ஐம்பதில் வளையாது'-இப் பழமொழிகள் குழந்தைப் பருவத்தின் சிறப்பைப் புலப்படுத்தும், எனவே, இப் பருவத்தில் குழந்தைகளிடம் நல்ல பழக்கவழக்கங்கள் ஏற்படவும், கெட்ட பழக்க வழக்கங்கள் ஏற்படாமல் இருககவும் எந்த கேரமும் கண்காணிக்க வேண் டுவது அனைவருடைய சமுதாயக் கடமையும் ஆகும். 2128–5