பக்கம்:மங்கல மனைமாட்சி.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33 கைக்கு ஊக்கமளிப்பதன்றி-வாழ்க்கை இன்புற வும் இன்புறுத்தவுமே அன்றி துன்புறவும் துன் புறுத்தவும் அன்று என்ற உயர்ந்த பண்பாடு ஏற்பட உதவுகிறது. அழகு உணர்வும் அன்புணர் வும் உள்ள உள்ளத்திலேயே ஆண்டவன் என்றும் வாழ்வான். பண்பும் பயனும் கிறைந்த பிற்கால வாழ்விற் குப் பிள்ளைப் பருவம் ஒரு ஒத்திகை. எனவே, அதில் அமையும் ஒழுங்கும் ஒழுக்கமும் உறுதியும் ஊக்கமுமே வாழ்விற்கு இன்பமும் ஒளியும் வழங் கும். போலச் செய்யும் (imitation) ஒரு பருவம் பிள்ளைப் பருவம். மனித வாழ்க்கையின் அடிப் படையாக அப் பருவம் அமைகிறது. அத்தகைய நுட்பம் வாய்ந்த பருவத்தில் தன்னைச் சுற்றியுள் ளோர்கள்-வயது வந்தோர்கள்-முதியோர்கள்வாழும் அறிவு கிறைந்த-உணர்வு செறிந்தஒழுக்கம் கிறைந்த வாழ்வைப் பார்த்தே பிள்ளைகள் தம் வாழ்வை உருவாக்கிக்கொள்கின்றனர். இப் பெரிய உண்மையை ஆழ உணர்ந்து, வயது வந்தோர் பொறுப்போடு கடந்து கொள்வது பிள்ளை வளர்ப்பிற்குச் செய்யும் மிகப் பெரிய தொண்டு ஆகும். கடவுளே குழந்தை; குழந்தையே கடவுள். குழந்தை வாழ்க குவலயம் வாழ்க ! குழந்தை வாழ குவலயம் வாழ்க ! (உதவி : சைவ சமயச் சொற்பொழிவுகள் சைவ சித்தாந்த மகா சமாச வெளியீடு, 1959)