பக்கம்:மங்கல மனைமாட்சி.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

87 வளர்த்து, ஆலாய்த் தழைக்கச் செய்வது அவள் கடமையாகிறது. அந்த ஆற்றல் தாயின் தனி ஆற்றல் - தன் நலமற்ற ஆற்றலாகும். இந்த ஆற்றல் பெண்களுக்கே சிறப்பாயமைந்த ஆற்றல். ஆகவேதான் காட்டுக்கு கல்ல மகனை உருவாக்கு வதைவிட வீட்டுக்கு நல்ல மகளை உருவாக்குவதில் தாய் ஊக்கம் காட்டுகிருள். பெருமுயற்சி எடுத் துக்கொள்கிருள். இந்த மகள் நாளைக்கு கல்ல தொரு வீ ட் டை விளங்கவைக்க வேண்டியவ ளல்லவா? எனவே, மிக எச்சரிக்கையோடு மகளை வளர்க்க - வாழவைக்க விரும்புகிருள் தாய். இந்த வளர்ச்சியும் பயிற்சியும் நம் சமுதாய அமைப்பிலே இயல்பாகவே அமைந்து விடுகிறது. பத்து ஆண்டுகள்வரை பதருமல், பா ரா ட் டி, சீராட்டி, வளர்த்த மகளை அதற்குப்பின் இன்னு மொரு பத்து ஆண்டுகள் - அடங்கி, அடக்கி, அச் சத்தோடு வளர்க்கிருள் தாய். ஏன்? வீட்டிலே பெற்ற பயிற்சி அதற்கு அப்பாலும் கல்ல பயிற்சி யாக அமையவேண்டுமே என்ற ஏக்கம்; ஆர்வம்; அதுமட்டுமா? அஞ்சுகிருள்; அலைமோதுகின்ருள். ஆம். தாய் மிக எச்சரிக்கையாக இருக்கவேண்டிய காலம். ஆனல், மகளுக்கு இளமை துடிப்பு மிக்க காலம் இது; கண்டதை எல்லாம் காட்சியாகக் கொள்ளும் கனவுக் காலம். உடல் வளர்ச்சியைப் போலவே உள்ள வளர்ச்சியும் விரைவாக வளரும் காலம். இக்காலத்தில் ஏற்படுகின்ற சூழல்களை வெற்றிகாண பயனுடைய சூழல்களாக்கிக்கொள்ள