பக்கம்:மங்கல மனைமாட்சி.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 முதல் பத்தாண்டு காலத்தில் அவள் பெற்ற உறுதி யான உள்ளப் பயிற்சி உதவியாக இருத்தல்வேண் டும். பின்னர் அவள் தானகவே - தனியாகவே - உலக இயல்புகளின் உண்மைகளை உணர்ந்து - ஒரு சிறிதும் ஏமாருமல் வாழும் பயிற்சியைப் பெற்றுவிடுகிருள். பெண்களை வளர்ப்பதில் தாய்க்கு இருக்கும் அல்லல்கள் பலப்பல. கடிவாளமிட்ட-கண்மறை விட்ட - குதிரையைப்போல நேரான வழியில் அவளே கடத்திச் செல்லத் தாய்க்குத் தனி ஆற்றல் தேவை என்பதை யாரும் மறுக்க முடியாது; மறக்க வும் முடியாது. பெண்ணுே கண்ணுே?’ என்பர் பெரியோர். கண் புண்ணுகிவிடாமல் காக்க வேண் டியது தாயின் கடமையல்லவா ? சொல்லவும் முடி யாமல் மெல்லவும் முடியாமல் தவிக்க வேண்டிய பரபரப்புகள் பல தாய்க்கு ஏற்படுவது இயல்பே; இவற்றை எல்லாம் புறங்கான-வெற்றிபெறமகளுக்கு உள்ள உரமும், உணர்வுத் திறனும் அடிப்படையாயமைதல் இன்றியமையாததாகிறது. புயலில் சிக்கிய ஓங்கி உயர்ந்த தென்னையாயில்லா மல் வ8ளங்து தழைந்து சிக்கலிலிருந்து சிறப்பாய் விடுபடும் புல்லாய்-காணலாயிருக்க அவளைப் பழக்க வேண்டும். இப்பழக்கத்திற்கு உளவியல் பயிற்சியும் தேவையாகிறது. பிறருடைய உள வியலைச் சரியாகத் தெரிந்துகொள்ள-புரிந்து கொள்ளக்கூடிய பயிற்சியையும் மகளுக்குத் தர வேண்டும். அந்தப் பயிற்சியே அவளே ஒரு கல்ல தாயாக உருவாக்குமென்பதில் ஐயமில்லை.