பக்கம்:மங்கல மனைமாட்சி.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தறியாளர் தன்னுரை பஞ்சிதன் சொல்லாப் பனுவல் இழையாகச் செஞ்சொற் புலவனே சேயிழையா-எஞ்சாத கையேவா யாகக் கதிரே மதியாக மையிலா நூல்முடியும் ஆறு. உரத்தின் வளம்பெருக்கி உள்ளிய தீமைப் புரத்தின் வளமுருக்கிப் பொல்லா-மரத்தின் கனக்கோட்டம் தீர்க்குநூல் அதேபோல் மாந்தர் மனக்கோட்டம் தீர்க்குநூல் காண்பு. -நன்னூல்: 24, 25 உயர்வுக்கும் உய்வுக்கும் உலகம்; உலக வாழ்க்கை. பிறவி நீக்கப் பிறவி. கடவுட் பிறவி காணவே மனிதப் பிறவி. உழத்தலும் உழைத்தலும் உயர்வுக்கே துன்பமெல்லாம் இன்பத்திற்கே. இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி வேளாண்மை செய்தற் பொருட்டு -திருக்குறள் 51. இது விருந்தோம்பல் அதிகாரத்தில் முதற் குறள். எத்தனையோ பிறவி எடுத்தெடுத்தே ஏற்றம் பெற வேண்டும் என்பது இயற்கை -இறைவன் கட்டளை. அந்த வகையில் அமைவதே இந்த இல்வாழ்க்கை. சிற்றின்பச் சீர்மையே.--செழுமையே பேரின்பத்திற்கு á!!