பக்கம்:மங்கல மனைமாட்சி.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9 f பையும் பிறரை உதவி செய்யத் துண்டும் பண்பை யும் வளர்க்க வேண்டும். இத்தகைய ஆழ்ந்த உணர்வும் அன்பும் இருக் குமாயின் குடும்பத்திலுள்ள பலருடன் ஒன்றி வாழும் திறன் தானுகவே வரும். மன வேறுபாடுகள் வேரற்றுப் போகும். சூழலுக்கேற்ற நல்லறிவைப் பயிலவும், சூழலை வெற்றிகானப் பயில்வித்தலும் எளிதாக அமையும். க ற் கவு ம் கற்பிக்கவும் அமைந்த இடம் பல்கலைக் கழகமாவதுபோல வாழ வும் வாழ்விக்கவும் பயிற்றுகின்ற நல்ல குடும்பம் நல்ல பல்கலைக் கழகமென்பதில் வியப்பில்லை அல்லவா ? கிைலத்தின் தன்மை பயிர்க்குள தாகுமாம்; நீசத் தொண்டும் மடமையும் கொண்டதாய் தலத்தில் மாண்புவர் மக்களைப் பெற்றிடல் சால வேவரி தாவதோர் செய்தியாம்” என்ற பாரதியாரின் எச்சரிக்கையை மகளைப் பெற்ற ஒவ்வொரு தாயும் மனதில் கொள்ள வேண்டும்.