பக்கம்:மங்கல மனைமாட்சி.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

93 புதல்வற் கவைஇயினன் தந்தை மென்மொழிப் புதல்வன் தாயோ இருவரும் கவையினள் இனிது மன்றவர் கிடக்கை கனியிரும் பரப்பினிவ் வுலகுட னுறுமே ! -பேயனர்-ஐங்குறுநூறு-409 في قي) மனைக்குவிளக் காகிய வாணுதல் கணவன் முனைக்குவரம் பாகிய வெள்வேல் நெடுந்தகை புறநானூறு-314 இ அறவோர்க் களித்தலும் அந்தணர் ஒம்பலும் துறவோர்க் கெதிர்தலும் தொல்லோர் சிறப்பின் விருந்தெதிர் கோடலும். சிலப்பதிகாரம் 16: 71-3 (29 இன்துணை மகளிர்க் கின்றி யமையாக் கற்புக்கடம் பூண்ட இத்தெய்வ மல்லது பொற்புடைத் தெய்வம் யாம்கண் டிலமால். சிலப்பதிகாரம் 15 : 141-3 இ பெருந்தடங் கண்பிறை நுதலார்க் கெலாம் பொருந்து செல்வமும் கல்வியும் பூத்தலால் வருந்தி வந்தவர்க்கு ஈதலும் வைகலும் விருந்து அன்றி விளைவன யாவையே ? -கம்பராமாயணம்-8? இ