பக்கம்:மங்கல மனைமாட்சி.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 தாயில்லாப் பிள்ளை ஊருக்காகுமோ? தாயிற் சிறந்ததொரு கோயிலுமில்லை! தாயும் பிள்ளையும் ஆலுைம் வாயும் வயிறும் வேறு! தாயைக் கொன்றவனுக்கு ஊரிலே பாதிப்பேர் தாயைத் தண்ணிர்த் துறையில் பார்த்தால், பிள்ளையை வீட்டில் பார்க்க வேண்டியதில்லை தாய்க்குப் பின் தாரம்! பெற்ற மனம் பித்து; பிள்ளை மனம் கல்லு! பெண் என்ருல் பேயும் இரங்கும்! பெண்சாதி காற்கட்டு; பிள்ளை வாய்க்கட்டு: பெண்சாதி முகத்தைப் பார்க்கா விட்டாலும் பிள்ளை முகத்தைப் பார்க்க வேண்டும் பெண்டாட்டி ஆசை திண்டாட்டத்தில் விட்டது. பானை பிடித்தவள் பாக்கியம்! பெண்ணுக்கு மாமியாரும் பிள்ளைக்கு வாத்தியாரும்! பெண்ணைக் கொடுத்தவனே, கண்ணைக் கொடுத்தவனே! பெண்டென்று பிறந்தபோதே புருஷனும் பிறந்திருப்பான் பெண் புத்தி பின் புத்தி! மனைவியில்லாத புருஷன் அரை மனிதன்! மாதா பிதா செய்தது மக்களுக்கு! இ