பக்கம்:மங்கையர்க்கரசி.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மங்கையர்க்கரசி

காட்சி-1

இடம் : அரண்மனை

(மதுராபுரியில் வசந்தவிழா கொண்டாடு கின்றனர். அரண்மனையில் இளவரசன் காந்த ரூபனேயும், அவன் மனைவி மங்கையர்க்கரசி யையும் தோழிகள் வாழ்த்துப்பாடி ஆரத்தி எடுககின்றனர். அப்போது காந்தரூபனின் தந்தை மதுராங்கதன் அங்கே வருகிருன் அவனைக் கண்டு இளந்தம்பதிகள் இருவரும் வணங்குகின்றனர். அவர்களைப் பார்த்து)

மதுராங்கதன் : காந்த ருபா! நீ மகாபாக்கியசாலி. உன் வாழ்க்கைத்துணைவி மங்கையர்க்கரசி ... கம் அரண்மனைக்கே ஒரு அணையாத விளக்கு உங்கள் மங்களகரமான வாழ்க்கைக்கு...அம்பிகை என்றும் அருள்புரியட்டும். நீங்கள் என்றென்றும் நீடுழி வாழ்வீர்களாக ! -

மந்திரி :

(என்று வாழ்த்துகிருன். பிறகு காந்தரூபனும் மங்கையர்க்கரசியும் அவ்விடத்தைவிட்டுத் தான மண்டபத்துக்கு வந்து, குடிமக்களுக்குப் பரிசுகளை வழங்குகின்றனர். இதை உப்பரிகை யிலிருந்து மன்னன் மதுராந்தகனும் மந்திரியும் பார்க்கின்றனர்.)

கொடுப்பதில் கர்ணனையும், மிஞ்சிவிட்டார் நம்

இளவரசர்.

£17 8–1