மச்சு வீடு
அடியேன் காண நின் மூடாயே !
சண்டப் பெருச்சாளி மீதுஏறிச்
சடுகுடு என்ன உலாவி
இண்டை இளம்பிறை சாய
இணங்கிய கொம்போர் இரண்டும்
அண்டத்து அமரர் துதிக்க
அடைக்கலம் காத்த பிரானே
குண்டைக் கணபதி நம்பி
குடங்கையால் சப்பாணி கொட்டாயே!
பொழுது விடிந்தது முதல் என்ன என்ன செய்ய வேண்டும் என்பதைச் சொல்கிறது பாட்டு
பொழுது விடிந்தது பொழுது
போய்த் திருமலை ஏறவேணும்
ஏறி மலர்த்தபூக் கொய்யவேணும்
கொய்து திருமுடி சாத்தவேணும்
சாத்தியே கைகட்டி நிற்கவேணும்
நின்று திருவிளக் கேற்றவேணும்
எற்றி அரகர என்னவேணும்.
ஐயா கணபதி நம்பி
ஆயிரம் நரமம் உடையாய்
பொய்யில்லா மெய்யை உரைப்பாய்
போன தெல்லாம் தருவாய்!
வெள்ளித் தாளம் பூசிவைத்து
வேண்டும் படியே இட்டுஉண்டு
பள்ளிக்கு ஏற்க, நடவாய்
பாக்கியம் செய்த பிள்ளாய்
பிள்ளாய் பிள்ளாய் பேர்உடையாய்
பிள்ளைகள் தங்கள் பிரானாரே
இருந்திரே பிரானாரே
எங்கள் மனசு கலங்காதே