இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
பள்ளிக்கூடத்தில் பிள்ளையார் பள்ளித் தடுக்கும் கையேடும் படிக்கும் சுவடியும் பரிந்தெடுத்துத் துள்ளித் திரியும் கால்களைச் சுகமே நிறுத்தும் பிரானாரே! 5 பள்ளிக்கூடத்துக்குப் போகும் பிள்ளைகள் துள் ளித் திரிவதை நிறுத்திக்கொண்டு கால்கள் துறுதுறு வென்று அலைவதைச் 'சுகமே நிறுத்த வேண்டுமாம். அதோடு ஓடக்கூடாது, ஒளியக்கூடாது. இட்ட சோற்றையும் கறியையும் உண்டு முளைக்கப் பள்ளிக்குப்' போகவேண்டுமாம். ஓடாதே ஒளியாதே இட்டதே சோறும் பெற்றதே கறியும் உண்டு தூங்கிப் பூசை முடித்து வெள்ளி முளைக்கப் பள்ளிக்கு வாரும்! வீட்டில் 'வெள்ளி இந்தப் பாட்டைப் பாடிப் பிள்ளையாரைத் துதிக் கும் பிள்ளைகளின் நெஞ்சில் முதலில் எள்ளுருண்டை யின் மணமும் வாழைப் பழத்தின் சுவையும் புகுகின் றன. பிறகு தாங்கள் எப்படி எப்படி நடக்க வேண்டும் என்ற நெறி முறையும் பதிகின்றன.