பக்கம்:மச்சுவீடு.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிள்ளையார் பாட்டு

பள்ளிக்கூடப் பிள்ளைகளுக்குக் கடவுளுடைய ஞாபகத்தைப் பலபல விதமாகப் புகுத்திய தமிழர்கள் தலைமுறை தலைமுறையாகப் பல பாடல்களையும் சொல்லிக் கொடுத்து வருகிறார்கள். குழந்தைகளுக்கு அ என்ற எழுத்து முதல் ன் வரையில் வரிசையாகச் சொல்லிக்கொடுப்பது அந்தக் காலத்து வழக்கம். அந்த வரிசை ஞாபகத்திலே. நன்றாகப் பதிவதற்குத் தக்கபடி தோத்திரங்களையும் நீதிகளையும் கற்பிப் பார்கள். ஆத்திசூடி, கொன்றை வேந்தன் என்ற இரண்டு நீதி நூல்களும் எழுத்து வரிசைப்படி அமைந்த வாக்கியங்களை உடையன.

தோத்திர நூல்களிலும் உயிர் வருக்க மாலை, மெய் வருக்க மாலை என்ற இரண்டு வகையான பிரபந்தங்கள் உண்டு. அவற்றில் உள்ள பாடல்கள் அகர வரிசைப்படி இருக்கும். வருக்கக் கோவை என்றும் ஒரு பிரபந்தம் உண்டு .

தமிழில் சில எழுத்துக்கள் வார்த்தையின் முதலில் வருவதில்லை. அந்த எழுத்துக்களின் முறை வரும் போது. மேலே சொன்ன நூல்களில் அவற்றை இரண்டாம் எழுத்தாக வைத்துப் பாடியிருப்பார்கள்.

ஆத்திசூடியில் அறஞ்செய விரும்பு, ஆறுவது சினம் என்று ஒன்றன் பின் ஒன்றாக வாக்கியங்கள் வருகின்றன. டகரம் வரும்போது அதை வார்த்தை யின் முதலில் வைக்க முடியாமல் இரண்டாவது எழுத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மச்சுவீடு.pdf/12&oldid=1301803" இலிருந்து மீள்விக்கப்பட்டது