பக்கம்:மச்சுவீடு.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8

மச்சு வீடு

பாட்டை முடிப்பார்கள். பாட்டை இனிப் பார்ப் போம்.

சிந்தித் தவர்க்கருள் கணபதிஜயஜய

சீரிய ஆனைக் கன்றே

அன்புடை அமரரைக் காப்பாய்

ஆவித் துணையே கணபதி

இண்டைச் சடைமுடி இறைவா

ஈசன் தந்தருள் மகனே

உன்னிய கருமம் முடிப்பாய்

ஊர் நவ சந்தி உகந்தாய்

எம்பெரு மானே இறைவா

ஏழுல குந்தொழ நின்றாய்

ஐயா கணபதி தம்பியே

ஒற்றை மருப்புடை வித்தகா

ஓங்கிய ஆனைக் கன்றே

ஔவியம் இல்லா அருளே

அஃகா வஸ்து ஆளவா

இது வரையில் அகரம் முதல் அக்கன்னா வரையில் உள்ள உயிரெழுத்துக்களை முதலாக வைத்துப் பாடியாகிவிட்டது. கணபதி தம் தலையில் வளைந்த மாலையை அணிந்திருக்கிறார்; அவர் தலையில் சடையும் இருக்கிறது. இந்தக் கோலத்தை எண்ணி, “இண்டைச் சடைமுடி இறைவா" என்று போற்றுகின்றனர். ஊருக்கு ஊர், மூலைக்கு மூலை, பிள்ளையார் அமர்ந்திருப்பதைப் பார்த்தவர்கள். குழந்தைகள், கோயில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஒரு மரத்தடியிலாவது அமர்ந்து சந்திதோறும் காட்சியளிப்பவர் பிள்ளையார். "ஊர் நவ சந்தி உகந்தாய்" என்று பாராட்டும்போது அந்தச் சந்திப் பிள்ளையாரை நினைத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மச்சுவீடு.pdf/14&oldid=1301819" இலிருந்து மீள்விக்கப்பட்டது