பிள்ளையார் பாட்டு
9
துக்கொள்கின்றார்கள், பள்ளிக்கூடப் பிள்ளைகள். இனி, க முதல் ன வரையில் உள்ள எழுத்துக்கள் வருகின்றன.
கணபதி எனவினை களைவாய் ஜயஜய
ஙப்போல் மழுவொன் றேந்தியே❠
சங்கரன் மகனே சதுரா
ஞயம் தம் பினர்பால் ஆடியே
இடம்படு விக்கின விநாயகா
இணங்கிய பிள்ளைகள் தலைவா
தத்துவ மறைதெரி வித்தகா
நன்னெறி விக்கின விநாயகா
பள்ளியில் உறைதரும் பிள்ளாய்
மன்றுள் ஆடும் மணியே
இயங்கிய ஞானக் குன்றே
அரவக் கிண்கிணி ஆர்ப்பாய்
இலகுங் கொம்பொன் றேந்தியே
வஞ்சனை பலவுந் தீர்ப்பாய்
அழகிய ஆனைக் கன்றே
இளமத யானை முகத்தாய்
இறகுபதி விக்கின விநாயகா
அனந்தலோ டாதியில் அடிதொழ அருளே!
ட, ண, ய, ர, ல, ழ, ள, ற, ன என்னும் ஒன்பது எழுத்துக்களையும் இடம்படு, இணங்கிய, இயங்கிய, அரவக் கிண்கிணி, இலகும், அழகிய, இளமத யானை, இறகு, அனந்தல் என்று இரண்டாம் எழுத்தாக வைத்திருப்பதைக் காண்க. கணபதியின் கையில் உள்ள மழு எழுத்துக்களைக் கற்றுக்கொள்ளும் குழந்தைக்கு ங என்பதைப் போல் இருக்கிறதாம்; "ஙப்போல் மழு" என்று சொல்லுகிறான். விநாயகர் பெரிய தேகத்தை உடையவர். அவர் உட்கார்ந்து கொண்டால்