கல்வித் தெய்வம்
13
புத்தகத்து உள்ளுறை மாதே!
பூவில் அமர்ந்துஉறை வாழ்வே!
வித்தகப் பெண்பிள்ளை தங்காய் !
வேதப் பொருளுக்கு இறைவி !
முத்தின் குடைஉடை யாளே!
மூவுல கும் தொழும் தேவி!
மேலே அவளுடைய அங்கங்களின் வருணனை ஆரம்பமாகிறது. இந்தப் பகுதியைக் குழந்தை இயந்திரம் மாதிரி ஒப்பிக்குமே ஒழியச் சரஸ்வதியின் திருவுருவ வருணனை என்று எங்கே தெரிந்துகொள்ளப் போகிறது? புத்தகந்தான் சரஸ்வதி என்ற திடமான நம்பிக்கை கொண்டது அக் குழந்தை.
செப்பு கவித்தன முலையாய்!
செவ்வரி ஓடிய கண்ணாய்!
முத்து நிரைத்தவெண் பல்லாய்!
முருக்கம்பூ மேனி நிறத் தாளே!
தக்கோலத் தின்றதுவர் வாயாய்!
சரஸ்வதி என்னும் திருவே!
அடுத்தபடி குழந்தை பிரார்த்திக்கத் தொடங்குகிறது. எழுத்தறிந்து பெருமையுள்ள மகன் ஆகி மிடி தீர்ந்து வாழவேண்டுமென்றும், அதற்குக் கிருபா நோக்கம் பாலிக்க வேண்டுமென்றும் பிரார்த்தித்துக் கொள்கிறது.
எக்காலும் உன்னைத் தொழுவோம் ;
எழுத்தறி புத்தி பண்ணுவிப்பாய்;
ஆக்காய் எம் பெருமாட்டி,
அழகிய பூ அணை மீதாய்,
நோக்காய் என்மிடி தீர;
நொடிக்கும் பிராமணத்தி நோக்காயே.