14 மச்சு வீடு
பின்னும் தோத்திரம் வடமொழி வார்த்தைக ளோடு வருகிறது. ஞானக் கொழுந்து, கல்விக்கு அரசு கணக்கு அறி தேவி, சொல்லும் பொருளுமாய் இருப்பவள் சூட்சுமமான உருவத்தை உடையவள் என்று அர்ச்சனையைப்போல ஒன்றன்பின் ஒன்ருகக் கலைமகள் புகழும் பெயரும் வரும்போது குழந்தையின் உள்ளத்திலே ஒரு வகையான பக்தி மீதுர்ந்து நிற்பதைக் காணலாம். - -
சாலு நெல் அரிசி கொண்டு
சரஸ்வதி பூசை பண்ணிப் பாலொடு பழத்தை நிரப்பிப்
பராவித் தொழுவோம் நங்காய்! நங்காய் நங்காய் நமோஸ்து 1
ஞானக் கொழுந்தே நமோஸ்து . கல்விக்கு அரசே நமோஸ்து
கணக்கு அறி தேவி நமோஸ்து ! சொல்லும் பொருளே நமோஸ்து ! சூக்கும ரூபி நமோஸ்து ! இந்தச் சூட்சும ரூபியைப் புத்தக உருவத்திலே வைத்து வணங்கும் குழந்தைக்கு அந்தப் புத்தகத் திலே எத்தனை கெளரவ புத்தி உண்டாகிறது! தப்பித் தவறிக் காலிலே பட்டால் கையால் தொட்டுக் கண் னில் ஒத்திக்கொள்கிறது.
இது பழைய கதை ஆலுைம் சில சில கிராமங் களிலே இன்னும் இத்தகைய குழந்தைகள்ைக்
காணலாம்.