பக்கம்:மச்சுவீடு.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 மச்சு வீடு எடுத்துச் சொல்கிருன். நரசிங்கம் காணக் காண இனிக்கும் கோலம் கொள்கிறது.

கலக லென்று சிரிக்குமாம்-அது காணக் காண இனிக்குமாம் சங்குச் சக்கரச் சாமி வந்து சிங்குச் சிங்கென ஆடுமாம்! குழந்தையும் இதோ கல கலவென்று சிரிக்கிறது. அதுவும் காணக் காண இனிக்கத்தான் இனிக்கிறது. இந்த அருமையான பாட்டை ஓசை கெடாமல், அழகு மங்காமல் வேறு பாஷையிலே மொழி பெயர்த்துச் சொல்ல முடியுமா? நிச்சயமாக முடியாது அந்தச் சங்குச் சக்கரச் சாமியே வந்தாலும் முடியாது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மச்சுவீடு.pdf/24&oldid=610693" இலிருந்து மீள்விக்கப்பட்டது