வரதர் உற்சவம் 21
உற்சவம் ஆரம்பமாகிவிட்டது. ஆழ்வார் முதல் நாள் எழுந்தருளி மார்க்கங்களைச் சரி பார்ப்பதாக ஓர் ஐதிஹ்யம் உண்டு. அதை 'முள்ளுப் பொறுக்குதல்' என்று வீட்டுப் பாஷையில் வழங்குவார்கள். அதைப் பாட்டுச் சொல்லும் மாதிரி வருமாறு:
பனை ம ரத்தில் கள்ளு பசங்கள் வாயில் சொள்ளு கொல்லே விளைந்தால் எள்ளு ஆழ்வார் பொறுக்கும் முள்ளு பிறகு துவஜாரோகணம் ஆகிறது.
- சாதம் கொதிக்கிறது வடியும் கையில் காரியம் படியும் நினைச்ச காரியம் முடியும் வரதர்க் கேறும் கொடியும்-நம்ப வரதர்க் கேறும் கொடியும்.
பிறகு பெருமாள் சப்பரத்தில் எழுந்தருளுகிருர்.
வாசலில் விற்குமாம் மாம்பழம் வருந்தி அழைத்தால் இப்புறம் வரமாட்டேன் என்ருல் அப்புறம்-நம்ப - வரதர் ஏறும் சப்பரம். . . . உற்சவத்தில் ஒவ்வொரு நாளும் வரதர் காலையில் ஒரு வாகனத்திலும் மாலையில் ஒரு வாகனத்திலும் எழுந்தருளி உலா வருகிருர்,
உடைமை பண்ணற தங்கம்-வரதர் உலகம் பதிகு லெங்கும் - தெற்கே போனுல் ரீ ரங்கம் வரதர் ஏறும் சிங்கம்.