பக்கம்:மச்சுவீடு.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மச்சு வீடு

குசவன் பண்ணற பானே கூத்தாடி வருதாம் சேனே அறிஞ்சு வருதாம் பூனை ஆருந் திருநாள் யானே.

கொடி வழியில் பூமரம் கோணு மாணு போமரம் (?) பசங்கள் ஆடறது பம்பரம் வரதர்க்குப் போடும் சாமரம்

துரைகளுடைய காசில் தள்ளிவிட்டான் தாசில் ஏகாம்ப ரேசர் வாசல்

ஏழாந் திருநாள் ஏசல்.

இதோ வருகிறது தேர்!

கழனி விழுகிற காரு கணக்கு எழுதற ஊரு வெள்ளம் வறதுபா லாறு வீதியில் வந்தது தேரு.

தேர் ஓடி நிலைக்கும் வந்துவிடுகிறது.

~. . . . காதில் இட்டால் ஓல

கழுத்தில் முத்து மாலை வாரிச் சொரி கிருள் தலையில் வந்த தேதேர் நிலையில்.

பிறகு குதிரை வாகனம்.

. . . கொட்ட மடிச்சாடு குதிரை

கொம்பு சளைச்சான் சண்டையில் தெற்கே போளுல் மதுரை. வரதர் ஏறும் குதிரை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மச்சுவீடு.pdf/30&oldid=610699" இலிருந்து மீள்விக்கப்பட்டது