பக்கம்:மச்சுவீடு.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வரதர் உற்சவம் 25

பல்லக்கு முதலியவை தொடர்ந்து வருகின்றன.

பட்டறை போட்டாள் பல்லக்கு பாத்துப் பயந்தாள் சொல்லுக்கு யுத்தம் தொடுத்தாள் மல்லுக்கு ஒன்பதாந் திருநாள் பல்லக்கு,

வாடாப் பூவைக் காட்டி வருந்தி அழைத்துச் சூட்டி ஒரத்தா மாரெல்லாம் பூட்டி ஒன்பதாம் புண்ணியக் கோட்டி.

கோட்டைக் கலங்காரம் கொத்தளம் கூத்துக்கு அலங்காரம் மத்தளம் தயிர்ப்பான உடைந்தால் தத்தளம் பத்தாம் திருநாள் சத்தாபரணம். வெற்றிலேத் தோட்டத்து ஆத்தி தளிகை பண்ணினுல் நேர்த்தி புஷ்ப மாலையைச் சாத்தி

பெருமாள் விடா யாத்தி! பாட்டிலே வரதர் உற்சவம் ஒழுங்காக நடை பெற்று விடுகிறது. இந்தமாதிரி அந்த அந்த ஸ்தலங் களில் பாடல்கள் வழங்குவது உண்டு. இந்தப் பாட் டிலே இன்னும் சில கூடுதல் குறைவும் உண்டு.

தாளத்தோடும் பாட்டோடும் தெய்வத்தை நினைக்கவும், உற்சவத்தை நினைக்கவும் இந்தப் பாடல் உதவுகிறது. குழந்தைகள் சந்தோஷமாய்ப் பாடி உற்சாகமடைய ஏற்றதாகப் பாட்டு ஓடுகிறது.

(இந்தப் பாடல்களை எனக்கு உதவியவர் என் நண்பர் கா. ரீ.ரீ.)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மச்சுவீடு.pdf/31&oldid=610700" இலிருந்து மீள்விக்கப்பட்டது