பக்கம்:மச்சுவீடு.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணன் விளையாட்டு 27

கைவும் மன்னனுகவும், தாயாகவும் தந்தையாகவும், சீடனுகவும் குருவாகவும், காதலியாகவும் வைத்துப் பாடியிருக்கிருர்.

நாடோடிப் பாடல்களில் கண்ணன் உலவும் இடங்கள் பல. அவன் கோபியர்களுடன் புரியும் இன் பத் திருவிளையாடல்கள் நிறைந்த காட்சிகள் பல. ஒன்றைப் பார்ப்போம்.

கிருஷ்ணன் தங்கள் வீட்டிலே புகுந்து உறியி லுள்ள வெண்ணெயைத் திருடித் தின்ருனென்பதை ஆயர் மடமகளிர் சொல்கிருர்கள்: -

ஒட்டுத் திண்ண மேலே-கிருஷ்ணன்

உரலை வைத்தேறிச் சட்டி வெண்ணெ யெல்லாம் - பகவான்

சர்வமும் தின்ருன். இந்தாடி வெறுஞ் சட்டி-என்று எடுத்துக் காண்பித்தாண்டி. உறியில் வெண்ணெய் எல்லாம்-கிருஷ்ணன்.

உருட்டித் தின்று விட்டான்-பெண்களே அதட்டித் தின்று விட்டான். - வெறும் சட்டி போடி-என்று

வெறுமை காண்பித் தாண்டி,

உறியில் வெண்ணெய் போயிற்றே என்ப தல்ை கோபியர்களுக்குத் துக்கம் உண்டாகவில்லை. உண் மையில் அவர்களுக்குச் சந்தோஷந்தான். ஆளுல் அந்தக் கிழட்டு மாமியார் வந்து, "எங்கே வெண் ணெய்?" என்று கேட்டால் என்ன செய்வது? கிருஷ் ணனைப் பார்த்துக் கேட்கிருர்கள்: - .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மச்சுவீடு.pdf/33&oldid=610702" இலிருந்து மீள்விக்கப்பட்டது