28 - மச்சு வீடு
உறியில் வெண்ணெய் எல்லாம்-கிருஷ்ணு உருட்டித் தின்று விட்டாய்-பெண்களை
அதட்டித் தின்று விட்டாய்! என்னடா காரியம்?-கிருஷ்ணு
இத்தனை துடுக்கு ஏண்டா? மாமியார் இதைக் கண்டால்-கிருஷ்ணு
மரியாதை போகுமேடா!
"அட இதற்குத்தானு இவ்வளவு பிரமாதம்? என் னைக் கண்டால் ஏன் இவ்வளவு பயம்? எங்கே, அந்தக் கிழவியைக் காட்டுங்கள்? நானே வந்து என் விஷ மத்தை அவளிடம் கொஞ்சம் காட்டுகிறேன்' என்று கண்ணன் நகைத்துக்கொண்டே சொல்கிருன்:
ஏண்டி இடைச்சிகளா-எனக்கண்டால்
ஏண்டி பதுங்கிறீர்கள்? சின்னக் குழந்தை போல-நான் வருவேன்
விந்தைகளைச் செய்வேன். கூடியே போவோம் வாடி-மாமி
மடியைப் பிடித்திழுப்போம்-அந்தக் கிழவி துணியைப் பிடித்திழுப்போம் ! - நல்ல காரியம் தூங்கிக்கொண்டிருக்கிற புலியை வாலுருவிவிடும் செயல் அல்லவா இது?
- ★ -
வேறு ஒரு கூட்டத்தார் கண்ணன் மேல் வேறு ஒரு விதமான வழக்கை எடுத்துரைக்கிருர்கள். . தங்கக் குடங் கொண்டு-பெண்கள் எல்லாம் தண்ணீர்க்குப் போகையிலே-பெண்கள் ஜலத்துக்குப் போகையிலே-பெண்கள் மடுவிற்குப் போகையிலே'