கண்ணன் விளையாட்டு 29,
தண்ணிர் மொடாவைத் தரையில் இறக்கித் தடவி முத்தத் தந்தான்.
முத்தந்தாடி என்ருன்-கிருஷ்ணன் மூக்குத்தி கமுற்றிக் கொண்டான்-பச்சைக்கல் மூக்குத்தி கழற்றிக் கொண்டான்-ஒண்டிக்கல் மூக்குத்தி கழற்றிக் கொண்டான்-வெள்ளைக்கல் மூக்குத்தி கழற்றிக்கொண்டான்
மூக்குத்தி போனுல் போகிறது" என்று இருந்து விடலாம். ஆனல் மூக்குத்தியை வாங்கித் தந்த புருஷனுக்கு என்ன வகை சொல்வது? அவர்கள் கண்ணனிடம் முறையிடுகிருர்கள்.
மட்டி மூடம் ஆச்சே-எனேக் கொண்டவன் மாட்டி அடிப்பானே! கிருஷ்ணு எட்டி அடிப்பானே-கிருஷ்ணு துரத்தி அடிப்பானே புண்ணிய மாகப் போகுது கிருஷ்ணு மூக்குத்தி தாடா!
★
இந்தமாதிரி விஷமங்களையெல்லாம் பொ றுக் காமல் கோபியர்கள் யசோதையிடம் போய் முறை
யிட்டுக் கொள்கிருர்கள்,
அடியே பிடியே என்று கிருஷ்ணன் துடியாகப் பேசுருண்டி-அந்தக் கிருஷ்ணன் துடியாகப் பேசுருண்டி, . என்னடி யசோதை-நிபெற்ற பிள்ளை - பேச்சுத் துடுக்குக் காரன்-ரொம்ப ரொம்பப் பேச்சுத் துடுக்குக்காரன். ஊரை விட்டுக் குடிவிலகிப்