பக்கம்:மச்சுவீடு.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணன் விளையாட்டு 3].

இப்பவும் பால்குடித்து நான் பெற்ற பிள்ளை ஏ&ணயி லேபடுத்தான் - அந்தக் கிருஷ்ணன் ஏணேயி லேபடுத்தான். சித்திர மேடையிலே - என் குழந்தை நித்திரை போகிருண்டி , என் கண்ணன் நித்திரை போகிருண் டி. எட்டிப் பாருங்கோடி - அந்தக் கிருஷ்ணனே எட்டிப் பாருங்கோடி ! "இதென்னடா கூத்தாயிருக்கிறது! நாம் சொல்வ தெல்லாம் பொய்யென்றல்லவா சொல்கிருள் ? குழந்தை பால் குடித்துவிட்டுத் தூங்குகிருனும்!" என்று எண்ணிப் பார்க்கிருள் ஒரு கோபி. தொட்டி லிலே படுத்திருக்கும் குழந்தை தன் விஷமத்தை விட வில்லை.

எட்டியே மெள்ளப் பார்த்தாள் - ஓர் இடைச்சி

எட்டியே மெல்லப் பார்த்தாள்.

எட்டி மயிர்பிடித்தான் - அந்தக் கிருஷ்ணன்

எட்டி மயிர்பிடித்தான் !

"பார், பார், உன் குழந்தை இங்கும் விஷமம் செய் கிருன், மயிரைப் பிடித்திழுக்கிருனே!" என்கிருள் இடைச்சி.

"இதென்ன அக்கிரமம் பச்சைக் குழந்தை மயிரைப் பிடித்திழுத்தால் அது பிசகா என்ன? குழந்தையை எழுப்பிவிட்டால் அவன் கை சும்மா இருக்குமா?" என்கிருள் யசோதை,

' பின்னே நாங்கள் சொல்வது கட்டுக் கதையா?”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மச்சுவீடு.pdf/37&oldid=610706" இலிருந்து மீள்விக்கப்பட்டது