இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
32 மச்சு வீடு
"அது என்னவோ, எனக்குத் தெரியாது. கையும் களவுமாகப் பிடித்து வந்தால் நீங்கள் சொல்கிற தண்டனையை அளிக்கிறேன்” என்கிருள் யசோதை.
கையுங் களவு மாக - என் மகனைக் - கட்டிக் கொண்டு வாங்கோ - அந்தக் கிருஷ்ணனேக் கட்டிக் கொண்டு வாங்கோ ! செய்கிற தண்டனை யெல்லாம்-உங்கள் எதிராகச் செய்து முடிப்போம் வாடி -அந்தக் கண்ணனைச் செய்து முடிப்போம் போடி ! கண்ணனையாவது, கட்டவாவது! கோபியர் களாலும் கட்ட முடியவில்லை; கட்டும்படி சொன்ன யசோதையாலுமே கட்ட முடியவில்லையே!
(இந்தப் பாடல்களைச் சேகரித்துத் தந்தவர் சைதாப்பேட்டை பூரீ எஸ். ஜகந்நாதன்)