கண்ணன் செய்த சோதனை 1.
பிராமணக் குடும்பங்களில் மகளிர் பரம்பரையாகப் பாடிக்கொண்டு வரும் அரிய பாடல்கள் பல உண்டு. வேதாந்த பரமாகவும் புராண சம்பந்தமாகவும் உள்ள கதைப் பாட்டுக்கள் பல இப்படி வாய்மொழியாக வந்து கொண்டே இருக்கின்றன. துரதிருஷ்ட வசத்தால் இளமையிலேயே கைம்மை நிலை அடைந்த பெண். டிருக்கு இத்தகைய பாடல்கள் முழுவதும் மனப்பாட மாக இருக்கும். குசலவர்கள் சரித்திரம், ஜீவ நாடகம், சாவித்திரி கதை முதலிய கதைப் பாடல்கள் தமிழ் நாட்டில் வழங்கி வருகின்றன. அவற்றிற் பெரும் பாலானவற்றை ரீமதி சகோதரி சுப்புலகஷ்மி அம்மாளவர்கள் திருத்தமாகப் பதிப்பித்து வெளியிட்டிருக்கிருர்கள். வர வர இந்தக் கதைப் பாடல்களைப் பாடுபவர்கள் அருகி வருகின்றனர். ஆதலின் இன்னும் அச்சில் வெளி வராமல் பிராமணக் குடும்பங்களில் உலவிவரும் பாடல் களைத் தொகுத்து அச்சுக்குக் கொண்டு வரவேண்டும். இல்லையானுல் அவை இனி வரும் சந்ததிக்குப் பயன் படாமல் மறைந்து போய்விடும். - இந்த வகையில் அமைந்த பாடல்களில் 'அனந்தங் காடு என்பது ஒன்று. திருவனந்தபுரத்தில் அனந்த பத்மநாப ஸ்வாமி கோயில் கொண்டு எழுந்தருளு வதற்குக் காரணமான கதையைச் சொல்வது அது மிகவும் அழகான வரலாறு.
★