பக்கம்:மச்சுவீடு.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 - மச்சு வீடு

பூரீவாங்கள் என்ற முனிவர் விஜயநகரத்தில் இருந்து கர்மபந்தங்கள் ஒழியும் பொருட்டுத் தவம் புரிந்து வந்தார். ஜன்ம ஜன்மந்தோறும் கண்ண பிரானைப் பூஜித்து வந்ததல்ை அவருடைய தவ விரதம் சிறப்பாக அமைந்தது. அஷ்டாகூடிர மகா மந்திர ஜபத்தைச் செய்து அஷ்டாங்க யோகம் பண் ணிப் பாலருபக் கண்ணபிரானைத் தியானித்து வந்தார் அம் முனிவர். -

கண்களை மூடி அசைவற்று வீற்றிருந்து தவம் புரியலானர் பூரீவாங்கள். அகத்துக்குள்ளே ஒலி மய மான பரப்பில் கண்ணபிரான் திருவுருவத்தைக் கண்டு எல்லாம். மறந்த நிட்டையிலே இன்புற வேண்டும் என்பது அவருடைய ஆர்வம். மோன நிலையில் அகத்துக்குள்ளே நாட்டம் செலுத்தி வீற்றிருந்தார்.

கண்ணபிரான் அம்முனிவரைச் சோதிக்கத் துணிந்துவிட்டான். உலகை மறந்து புறத்தே தோன்றும் உயிர்களைப் புறக்கணித்து நிஷ்டை புரிவ தல்ை பயன் இல்லை என்று காட்ட எண்ணினுளுே என்னவோ! சின்னஞ் சிறு குழந்தையாய் முனிவர் முன்போய் நின்ருன். - - ஆஹா !என்ன மனமோகனமான வடிவம்! தோன்றிய கோபாலர் வடிவைச் -- - சொல்லி முடியாது ஒருவராலே. பூர்ண சந்திரன் போல்முகமும்

புண்ட fகமலர்க் கண்களும் தாழ்ந்த கிண்கிணி அரைவடமும் - சதங்கை கொஞ்சிச் சலன்சலென்க ஆன விரல்கழல் மோதிரங்கள்

ஒடிச் சிதறவே நிருத்தஞ்செய்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மச்சுவீடு.pdf/40&oldid=610709" இலிருந்து மீள்விக்கப்பட்டது