38 மச்சு வீடு
தும், ஐயோ, உலக ஒலி என் தவத்தைக் கெடுக் கிறதே!" என்று வருந்தினர். "யாரோ குழந்தை நம் தவத்தைக் குலைக்க வந்திருக்கிறதே!" என்று எண்ணினர். கண்ணைத் திறந்தால் தவம் கெட்டுவிடு மென்ற குருட்டு நினைவில்ை கண்ணன் அழகுக் காட்சியைப் பாராத பாவியானர். கண்ணன் சும்மா இருக்கவில்லை.
திருமு கத்துடன் அவர்முகத்தைச்
சேரவே வைத்துத் தழுவி நிற்பர்; திரும்பவும் மந்த ஹாசத்துடன்
தண்டெடுத்தவர் தோளில்வைப்பார்; மணிப்பவழ வாய் நகைத்து நிற்பர்
வைத்த சிவலிங்கந் தனே எடுப்பர்; சரியில் லாத திருக்கையினுல்
சாளக் கிராமத்தைத் தள்ளிவைப்பார்; கருவ றுத்திடும் கமலக்கையால்
கமண்டல தீர்த்தம் கவிழ்த்திடுவார். இப்படிச் சகல லீலையும் காட்டியும், முனிவர் அந்தர்முகத் தியான பரராகவே அமர்ந்திருந்தார். இருபத்தொரு பிறவி என்னைக் காண்பதற்காக நீ தவம் புரிகிருய், உன் தவத்தை மெச்சினேன். உன் தியானத்தை நிறுத்து' என்று கண்ணன் வாய் மலர்ந்தான்; அந்த வார்த்தை முனிவர் காதில் விழ வில்லை. ஊர் வந்தும் வண்டியின்மேலே உள்ள ஆசையால் இறங்காத பிரயாணியைப்போல அவர் நிஷ்டை கூடியிருந்தார். - -
கண்ணன் பார்த்தான். இவர் அகத்தே ஒளி சிறிது இருப்பதல்ை நம்மைப் பார்க்கவில்லை. அங்கே முழு இருளைப் பரப்பினல் கண் திறப்பார்' என்று எண்ணி, ~ : -