பக்கம்:மச்சுவீடு.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணன் செய்த சோதனை 4l

நித்தியர் என்று அறியாமல்

நின்ற சிறு வரைக் கடிந்துரைப்பார்; புத்தி அறியாத பாலகனே நான்

போற்றும் நாதனத் தொடுவாயோ? எச்சில் அறியாத கண்மணியே !

இங்கனே செய்தால் நான் என்செய்குவேன்? சாந்த குணம் உடையவராகையால் குழந்தையை அடிக்கவில்லை. வையவில்லை. அதனுல் என்ன ? ஊனுடம்போடு வந்த குழந்தையாக எண்ணினரே ஒழிய ஊனுடம்பை ஒழிக்க வந்த ஒளி உருவம் என்று நினைக்கவில்லை. குழந்தைக்குப் பழம் தருவதாக ஆசைகாட்டி ஒத்தி விளையாடும்படியாகச் சொல்லு

វិញរឺ -

ஒத்தி விளேயாடி நின்முயாளுல் உச்சித மான பழந்தருவேன். என்ன பேதைமை கண்ணன் பொறுமையை இழந்தான். நான் குழந்தை உருவத்தோடு வந்தேன்; இவன் பார்க்கவில்லை. துளலி மாலை மணம் நாற நின்றேன் ; இவன் கவனிக்கவில்லை. சிலம்பொலி இன்னிசை தர நடனம் செய்தேன்; இவன் கண்ணைத் திறக்கவில்லை. இவனைத் தழுவினேன்; இவன் உணர வில்லை. கையைப் பற்றினேன்; வேண்டாம் என்று புறங்கையால் தள்ளின்ை. இவனுக்கு அருகில் வந்து அருள் செய்ய வந்தேன்; ஒத்திப் போ என்கிருன். ஆம்! இவனுக்குப் பாக்கியம் இல்லை. நாம் ஒத்திப் போகவேண்டுமாம்! சரி, அப்படியே செய்வோம்.' என்று திருவுள்ளத்தே எண்ணினன்.

திடீரென்று மறைந்தான். ரீவாங்கள் காதில் இடியோசை போல ஒரொலி கேட்டது. .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மச்சுவீடு.pdf/47&oldid=610716" இலிருந்து மீள்விக்கப்பட்டது