-46 மச்சு வீடு
இந்த வனத்திலே என்கண் குளிரவே
இன்னமும் ஒருகால் தோன்றிதில்லும்! குண்டலம் காறை கனகச் சேவடி
கெட்டிமுத் துப்பொன் காறை தாழவே ஏங்காமல் இந்த அடியான்முன்னே
இறைவனேவந்து தோன்றி நில்லும் ! - கண் முன்னலே திவ்யதரிசனம் தந்து நின்ற போது பாராதவர், இப்போது அணு அனுவாக அங்கம் அங்கமாக ஒவ்வோர் ஆபரணமாக எண்ணி எண்ணிப் பார்த்து உருகுகிருர். "மார்பில் கண்ண பிரானுக்கு மதாணியிருக்குமே! திருமுடியில் அழகிய கொண்டை இருக்குமே! திருமகுடம் துலங்குமே!... கண்ணு, என் கலக்கந் தீர அந்தத் திருமேனியை இன்னும் ஒருகால் காட்டாயா! தொங்கும் சுட்டியும் பொன்னும் பூவும் சுருண்ட மயிர்க் கற்றையும் விள்ங்கா நிற்க, இந்த ஏழைக்குமுன் மீண்டும் வந்தருள மாட்டாயோ! அப்பொழுது கனிவாயில் அமுதஞ் சிந்த அஞ்சனக் கண்ணைப் பிசைந்து அழுது சிவ பூஜையில் வந்து நின்ருயே; அந்தக் கோலத் தோடு இன்னும் ஒரு தரம் வந்து என் புல்லிய கண் காண நிற்கக்கூடாதா?"
மதம த்ென்னவே தயிர்த்திவலைகள்
வந்து மேனியில் தெறிக்கவே த்ாழியின் பக்கத்தில் தாமரைக் கையேந்தும் . சாமியே என்முன் தோன்றி நில்லு ! -
பாகவதத்தைப் படித்துப் பாலகோபாலன் லீலை களிலே ஆழ்ந்து போனவர் அம்முனிவர் யசோதை யிடத்திலும் கோபிமாரிடத்திலும் கொஞ்சிக் கொஞ்சிப் பேசி வெண்ணெய் தா என்று விளையாடிய பெருமான்