பக்கம்:மச்சுவீடு.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணன் செய்த சோதனை 43.

ஓங்கி அதட்டி நின்றவென் முன்னே தோன்றுவ தில்லை என்ருெளித் தாரோ? இந்த வனத்தின் மான்கலைகளாl என்னே ஆண்டவர் இங்கேவந்தாரோ? எந்தத் திக்கிலே போய்மறைந்தாரோ? என்குல தெய்வம் இங்கே.கண்டிரோ? காதற் கிளிகாள்! கரைமைனுவே! சாலை மரத்தின் சோலைக் குயில்காள்! பூக்கள் பொன்மணி சிந்தி இங்கனே பூர்ண ஸ்வரூபர் வந்தாரோ சொல்வீர். வந்தாரோ சொல்லும் பால முகுந்தன். செந்தா மரையின் வண்டினங்களாl மந்தார மாலை மாரில் அசைய - மாணிக்கச் சுட்டி நெற்றியில் மின்ன செம்பவமுவாய் அதரச் சோபையும் சற்றே உம்முட சாயலுங் காட்டி

- பிருந்தா வனத்தின் வேணு கானனே,

வேத நாயகா மெல்லியர் தோழா, கொஞ்சுங் கனிவாயின் கோல மழலைச்சொல் என்-கோமள ரூபா கோபால கிருஷ்ணு, அஞ்சினேன் ஹரி, அஞ்சினேன் ஹரி! ஆதி மூலமேளன் சஞ்சலத் திரும்.

"ஐயோ! நான் இனிமேல் கோடி ஜன்மம் தவம்

செய்தாலும் அந்த அழகிய கோலத்தைக் காண்பேனு கருணை பொழியும் மலர் விழிகளைக் காண்பேளு. கண்ணு' உன் கோபத்தை நான் அறியாமல் இருந்து விட்டேனே! முன்போலவே குழந்தை உருவத்தோடு வந்து நில். நான் செய்த பிழைகளைப் பொறுத்து

குத் தரிசனம் அளித்தருள்." - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மச்சுவீடு.pdf/55&oldid=610724" இலிருந்து மீள்விக்கப்பட்டது