பக்கம்:மச்சுவீடு.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 மச்சு வீடு

என் உயிர் இனி நில்லாது. உன்னுடைய தரிசனம் கிடைக்காவிடில் உயிரைப் போக்கிக்கொள்ள வேண்டி யதுதான்" என்று கதறினர். .

அவருடைய துயரம் கண்ணபிரான உருக்கியது. 'இனி இவரை அலைக்கழிக்கக்கூடாது" என்று நினைத் தான் போலும் முனிவர் சென்றுகொண்டிருந்தது ஒரு பெருங்காடு. இன்ன இடத்தில் இருக்கிருேம் என்பது அவருக்குத் தெரியாது. "அனந்தங் காட்டில் தரிசனம் தருவேன்" என்று இறைவன் அருளியதை அவர் மறக்கவில்லை. அனந்தங் காடு எங்கே இருக் கிறது?-அவர் அதை அறியார். - .

இந்த நிலையில் அவர் தட்டுத் தடுமாறி நடந்து கொண்டிருக்கையில் அங்கே வயல்கள் பரந்திருந்த ஒரு நிலப் பரப்பை அடைந்தார். அப்பொழுதுதான் நெற் பயிர் முளையிட்டு வளர்ந்திருந்தது. களையெடுக் கும் சமயம். அங்கே பள்ளரும் பள்ளியரும் சேர்ந்து களை பறித்துக்கொண்டிருந்தார்கள். அந்தக் கூட்டத் தில் ஒரு பள்ளி தன் குழந்தையை மேட்டிலே விட்டு விட்டுக் களை பறிக்க வயலுக்குள்ளே அடியெடுத்து வைத்தாள். குழந்தை அழுதது. சமாதானம் செய் தாள். அது அழுகையை நிறுத்தவில்லை. அவளுக்கோ கோபம் பொங்கி வந்தது. "இந்தா ஒரு வேலையும் செய்ய ஒட்டாமல் இப்படி அழுதாயானல் உன்னை நான் இந்த அனந்தங் காட்டில் தூக்கி வீசி எறிந்து

2 - .

விடுவேன்" என்று சீற்றத்தோடு கூறிள்ை.

அந்த வார்த்தையைக் கேட்டுக் குழந்தை அழு கையை நிறுத்திற்று. கண்ணபிரான் புன்னகை பூத் தான். முனிவர் உண்மையை உணரும் காலம் கிட்டி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மச்சுவீடு.pdf/60&oldid=610729" இலிருந்து மீள்விக்கப்பட்டது