பக்கம்:மச்சுவீடு.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணன் செய்த சோதனை 55

விட்டது. அவர் காதில் அனந்தங்காடு என்ற சொல் அமுதம் போல விழுந்தது.

"அம்மா, அனந்தங்காடு என்ருயே: அது எங்கே அம்மா இருக்கிறது?’ என்று ஆவலோடு அவர் பள்ளி யைக் கேட்டார். அவருடைய குரலிலே எத்தனை ஏக்கம் இருந்தது! -

"இதோ இரண்டு மூன்று வயல்களைத் தாண்டிச் சென்ருல் அனந்தங்காடு இருக்கிறது" என்று சொல்லி வேறு அடையாளங்களையும் பள்ளி தெரிவித்தாள்.

முனிவர் வேகமாகச் சென்ருர், கண்ணபிரானது சிலம்போசை அவருக்கு வழி காட்டியது. அனந்தங் காடு வந்தவுடன் அப்பெருமான் அங்கு நின்ற ஒரு பெரிய இருப்பை மரத்தடியில் மறைந்து போனன். அதுகாறும் கேட்டுவந்த கொத்துச் சதங்கையின் ஒலி முனிவர் காதில் விழவில்லை. கிண்கிணியின் அரவம் கேட்கவில்லை. வாதாடி வந்த திருநடையும் வண் ணக் கிண்கிணி ஓசைகளும், ஆதாளி அரவமும் கேட் காமல் முனிவர் நடுங்கினர். 'அனந்தங் காடு வந் தால் நம் கலி தீருமென்று நினைத்தோமே! இங்கே வந்த பிறகு உள்ளதையும் இழந்தோமே! காதிலே கேட்டு வந்த செஞ்சிலம்போசையும் நின்றுவிட்டதே' என்று தவித்தார்: "கண்ணு, நீ மறைந்துவிட்டாயே! இது என்ன மாயம்?" என்று கதறினர். 'என் கண் ணன் மறைந்த இடம் இதுதான். இங்கேதான் அவனைத் தேடிப் பார்க்க வேண்டும்' என்று எண்ணிச் சுற்றுமுற்றும் பார்த்தார். . . . . . . .

என்ன ஆச்சரியம் அங்கே நின்றிருந்த பிரம் மாண்டமான இருப்பை மரம் பட பட வென்று கீழே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மச்சுவீடு.pdf/61&oldid=610730" இலிருந்து மீள்விக்கப்பட்டது