பக்கம்:மச்சுவீடு.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 - மச்சு வீடு

சாய்ந்தது. அதைப் பார்த்தால் சாமானியமான மர மாகத் தோற்றவில்லை.

அது ஏதோ தெய்வப் பரிமளம் வீசி நின்றது; தெய்வ தத்துவத்தைப் புலப்படுத்தி நின்றது.

சாந்தும் புனுகும் சந்தனமும்

சாதி புஷ்பங்கள் பரிமளிக்க மோதி ஆகாசம் மட்டும் உயர்ந்து

மிகுந்த கிளையுடன் விழுதுவிட்டு சாங்கிய சாஸ்திரம் வேராகித்

தருமங்கள் எல்லாம் இலையாகி ஒதும் வேதங்கள் பூவாகி

உற்ற கல்பங்கள் காயாகி நாலு வேதப் பழத்தைக் கொண்டு

நான்முகன் என்னும் கிளிமோப்ப ஹேது இல்லாமல் அத்திசையில்

இடிமு ழக்கம்போல் ஒசையிட ஆதி காலத்து இலுப்பை மரம்

அனந்தங் காட்டிலே விழுந்த தப்போ, r 'இதென்ன அதிசயமாக இருக்கிறதே! இது காறும் காணுத காட்சியாகத் தோற்றுகிறதே வண் ணங் குலுங்கக் குழந்தையாக வந்த கண்ணனே இந் தத் திருக்கோலம் பூண்டானே? சின்னஞ் சிறிய உரு வத்தை அவமதித்த எனக்குப் பெரிய உருவத்தைக் காட்டத் திருவுள்ளம் பூண்டானே?' என்று எண்ணி உருகி அருகிலே சென்று பார்த்தார் முனிவர். அவர் தம் கண்ணையே நம்ப முடியவில்லை. உடம்பிற் புளகம் போர்த்தது. பகவான் பெரிய வடிவுகொண்டு சய னித்த திருக்கோலத்தோடு அவருக்குக் காட்சி அளித் தான். அந்த அருட் பெரு வடிவத்தைப் பார்க்க முனிவருடைய இரு கண்கள் போதுமா? * . . .'; .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மச்சுவீடு.pdf/62&oldid=610731" இலிருந்து மீள்விக்கப்பட்டது