கண்குளிரக் கண்டு உள்ளம் உருக ஆனந்த பரித ராக நின்ருர் முனிவர். எம்பெருமானைக் காண வேண்டுமென்று அவர் பட்ட துன்பத்துக்கு எல்லை உண்டா? கண்ணன் அவரைச் சோதனை செய்தான். அப்பொழுதெல்லாம் அவர் உள்ளம் வாடி உயிர் வாடி இருந்தார். இப்பொழுது?
பணிபோய் இருள் நீங்கிப் பாஸ்கரனும்
பாருலகில் வந்து உதித்தாப்போல் ஓடைக் கமலங்கள் ஒருநொடியில்
உள்ளங் குளிர்ந்தங்கே மலர்ந்தாப்போல் வாடும் பயிருக்கு மழைபொழிந்து
மனேகர மாகக் குளிர்ந்தாப்போல் தேடும் பூமியில் திரவியங்கள்
தெரித்திரன் கையில் கிடைத்தாப்போல் அஞ்சனக் காரன் வெகுதனத்தை
ஆரும் அறியாமல் எடுத்தாப்போல் தஞ்சமென் றங்கே எடுத்தணக்கும்
தாயைக் குழந்தைகள் கண்டாப்போல் கொஞ்சும் கிளிகளும் அன்னங்களும்
கூடி இனங்களைச் சேர்ந்தாப்போல் அவர் ஆனந்தம் அடைந்தார். கை குவித்தார்; விழுந்தார். புரண்டார்; அழுதார்; தொழுதார்; உருகி னர்; மறுகினர்; 'அப்பனே! உன் கருணையை எவ் வாறு பாராட்டுவேன்! ஹரி என்ற துணை காணுமல் பக்தன் அலைகிருன் என்ற கிருபையுடனே இங்கே தோற்றினயே இந்தக் காட்டில் நான் அலைகிற தைப் பொருமல் வந்து உதித்தாயே! நான் மகாபாவி அல்லவா? நீ என்னைத் தேடி வந்து என் அருகே நின்றபோது அகல நில் என்று சொன்ன வன்னெஞ்