பக்கம்:மச்சுவீடு.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணன் செய்த சோதனை 59.

சன் அல்லவா ? நிதான் வந்திருக்கிருய் என்பதை அறிந்துகொள்ளாமல் அபசாரம் செய்துவிட்டேன். நீ அந்தக் குற்றத்தைப் பொறுத்தருள வேணும்; எல்லா நற்குணங்களுக்கும் இருப்பிடமாகிய மூர்த்தி நீ அல்லவா? நான் செய்த பிழையைச் சகித்தருள வேணுமையா' என்று தம் குறையையும் பத்மநாபனது கருணு விசேஷத்தையும் நினைந்து ஆராமை மீதுர உருகி நின்ருர். . -

"எம்பெருமானே, உன்னத் தரிசித்தும் அபிஷே கம் செய்யாமல், மலர் கொய்து பூசிக்காமல், நிவே தனம் பண்ணுமல் வீண் பொழுது போக்குகிறேனே!" என்று வேசாறினர். அங்கே பூஜை பண்ண அவரிடம் என்ன இருக்கிறது? - - - -

அப்பொழுது அருகிலுள்ள நகரத்திலிருந்து ஒரு வணிகன் 'ஒற்றை உடுத்துக் கோடித் துணி போர்த் துப் பெற்றெடுத்த தந்தைக்குப் பிதுர் கர்மம்' செய்வ தற்காக வந்தான். அவன் தன் கையில் அந்தக் கர்மத்தின் பொருட்டுப் பச்சரிசியும் மாங்கனியும் வைத்திருந்தான். முனிவருடைய தோற்றத்தைக் கண்டு பயபக்தியுடன் அவன் அவருக்கு அவற்றைக் கொடுத்தான். அந்தணருக்கு இவற்றை அளித்துச் சிராத்தம் செய்ய எண்ணினேன். இவரைக் காட்டிலும் சிறந்தவர் யார் கிடைக்கப்போகிருர்கள்' என்ற நினை வோடு அவன் ஈந்தான். இதுவும் எம்பெருமான் திருவருட் செயலே என்று உவந்து முனிவர் பச்சரிசி

யையும் மாம்பழத்தையும் பெற்றுக்கொண்டார். அவற்

றையே நிவேதனப் பொருளாக வைத்து அனந்த பத்மநாபனுக்குப் பூஜை செய்யத் தொடங்கினர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மச்சுவீடு.pdf/65&oldid=610734" இலிருந்து மீள்விக்கப்பட்டது