பக்கம்:மச்சுவீடு.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மச்சு வீடு

இந்திய நாட்டு இலக்கியத்தில் வேதாந்த பர மான பாடல்களிற் பல, நேர்முகமாக விஷயத்தைச் சொல்லாமல் குறிப்பாகச் சொல்லும். ஆங்கிலத்தில் இந்த நெறியைக் கூடநெறி (Mysticism) என்று. வழங்குகிருர்கள். பழைய காலத்துச் சித்தர் முதல் நம்முடைய காலத்து ரவீந்திரர் வரையில் இந்த நெறி யிலே கவிதையைப் பொழிந்திருக்கிருர்கள். தங்கள் தங்கள் மனேதர்மத்துக்கு ஏற்றபடி ஆழ்ந்து சிந்திக்கச் சிந்திக்க இன்பத்தைத் தரும் பண்புடையன அக் கவிதைகள், மேலெழுந்த வாரியாகப் பார்த்து அநுப விக்கும் இயல்புடையவருக்கு விஷயமே விளங்காமல் மயக்கத்தை உண்டுபண்ணும் தன்மையும் அவற்றிற்கு உண்டு. - .

இந்தக் கூட நெறியை, இலக்கியமாகப் போற்றும் பாடல்களில் மட்டுமல்ல, நாடோடியாக வழங்கும் பாடல்களிலும் காணலாம். நம்முடைய நாட்டின ருக்குச் சுவையைத் தரும் அமைப்பு எல்லா வகை இலக்கியங்களிலும் காணப்படுவது இயல்பே. - மாங்காய்ப்பால் உண்டு மலைமேல் இருப்போர்க்குத்

தேங்காய்ப்பால் ஏதுக்கடி-குதம்பாய் தேங்காய்ப்பால் ஏதுக்கடி ? தாவாரம் இல்லை. தனக்கொரு விடில்க்ல தேவாரம் ஏதுக்கடி-குதம்பாய் தேவாரம் ஏதுக்கடி ? . . . .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மச்சுவீடு.pdf/68&oldid=610737" இலிருந்து மீள்விக்கப்பட்டது