பக்கம்:மச்சுவீடு.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மிச்சு வீடு: 63

என வரும் குதம்பைச் சித்தர் பாடல்களுக்குத் திட்ட மாக இன்னதுதான் பொருளென்று வரையறுத்துச் சொல்ல முடியுமா? வார்த்தைக்குப் பொருள் உண்டு; அதற்கு மேலும் ஒரு குறிப்பையுடைய இத்தகைய பாடல்களில் கவியை ரசிக்கிறவனுடைய உள்ளத்தின் ஆழத்தைப் போல அந்தக் குறிப்பு ஆழ்ந்து செல்லும். யோகி இதற்கு யோக தத்துவத்தைப் பொருளாக்ச் சொல்வான்; ஞானி ஞானுர்த்தத்தை விரிப்பான்; பக்தன் பக்தி நெறியோடு இணைத்துக் காட்டுவான். இந்த வியாக்கியான முறை தனித்தனி உள்ளச் செம்மைக்கு ஏற்ப அமைவதனால்தான் இவைகளுக்கு நிரந்தரமான உரை ஒன்றும் வழங்குவதில்லை.

நாடோடி ஞானியின் பாடல்களில் கூடநெறியில் அமைந்தவை எவ்வளவோ உண்டு. ஒரு விதமாகப் பொருள் செய்ய முடிந்தவை சில: பொருள் செய்ய முடியாமல் இன்னும் பரம்பொருளைப் போல ஆராய்ச் சிக்கு உள்ளாகி இருப்பவை சில; எவ்வளவு காலம் ஆராய்ந்தாலும் உண்மை உணராமல் என்றும் இரக சியப் பொருளாய் உள்ளவை சில.

திருத்தணிகை முருகக் கடவுளை ஒரு பக்தன் அணுகிப் பிரார்த்திக்கிருன். பிரார்த்தனை வெளிப் பட்ையான பொருளோடு இருக்கவில்லை. வார்த்தை களெல்லாம் எல்லோருக்கும் தெரிந்த வார்த்தைகளே.

ஆனலும், பொருளோ சிந்தித்துச் சிந்தித்து மனத்

துக்குப் பொருத்தமென்று தோன்றும்போது முடிவு கட்டிக்கொள்ளும்படி அமைந்திருக்கிறது.

蕾 . 蘇 - 张

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மச்சுவீடு.pdf/69&oldid=610738" இலிருந்து மீள்விக்கப்பட்டது