பக்கம்:மச்சுவீடு.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 மச்சு வீடு

திருத்தணிகை முருகக் கடவுளே, என் மனசு பொல்லாதது. அது சதா திரிந்துகொண்டே இருக் கிறது. காட்டிலும் மலையிலும் திரிந்து விணே பொழுது போக்குகிறது. அதை என் வசத்துக்குள் கொண்டு வர முடியவில்லை. எப்ப்டியாவது கொண்டு வர வேண்டுமென்று பார்க்கிறேன். என்னுடைய சக்திக்கு மிஞ்சியதாக இருக்கிறது. உன் திருவருள் இல்லாவிட்டால் இந்த மனசு வழிக்கு வராதுபோல் இருக்கிறது. ஆகையால் நீயே திருவருள் செய்ய வேண்டும். எப்படியாவது அதை வசமாக்கிப் பிடித்து என் கட்டுக்குள் அகப்படும்படி செய்யவேண்டும்.”

இப்படி நேரடியாகப் பிரார்த்தனை செய்துவிட் டால் நமக்கு எளிதிலே விளங்கிப் போகும். பாட்டில் இதே விஷயத்தைக் கூடமாகச் சொல்லுகிருன் நாடோடிச் சித்தன். .

கல்லு ഥാ-ക്ടtി

மெல்ல நடக்குதையா-அதைப் பிடித்துத் தாருங்காணும்-திருத்தணி

மலேயில் வேலவனே ! . ஒடிப் பறந்து திரியும் கவுதாரி இப்போது மெல்ல நடக்கிறதாம். அதைப் பிடிக்கச் சரியான தருணமாம். மனசு உலகியலிலே இருந்த வேகம் மாறிக் கொஞ்சம் முருகனை நினைக்கிற நிலைக்கு வந்திருக்கிறது; மெல்ல நடக்கிறது. அதைப் பிடித்துத் தர இதுதான் சரியான சமயம் ! ' .५ - .

மனத்தை ஒருவகையாக வசப்படுத்தியாயிற்று. மனம் ஓடாமல் இஷ்டப்படி வேலை செய்யும் நிலையில் நிற்கிறது. அடுத்தபடி அதற்கு வேலை கொடுக்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மச்சுவீடு.pdf/70&oldid=610739" இலிருந்து மீள்விக்கப்பட்டது