பக்கம்:மச்சுவீடு.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 - மச்சு வீடு

பக்குவம் இந்த நிலைக்குப் போதும். மேலுள்ள நிலைக்கு இது போதாது; இன்னும் பக்குவம் வேண் டும். அந்தப் பக்குவத்தை எனக்கு அருள் புரிய வேண்டும்"-இந்தப் பிரார்த்தனையையே கூடநெறி யில் சொல்கிருன்:

நேற்றுக் கொடுத்தபணம்-முருகா நெல்லுக்குச் செல்லவில்லே-அதை மாற்றித் தாருங்காணும்-திருத்தணி மலையில் வேலவனே!

நேற்றுக் கொடுத்த பணம் கம்புக்கும் சோளத்துக் கும் சென்றது. அவைகளால் பசி தீர்ந்தாலும் நெல் லஞ்சோறு சாப்பிட வேண்டும் என்று ஆசை எழு கிறது. அதற்கு இந்தப் பணம் செல்லாது. ஆகை யால்தான் அதை மாற்றித் தரவேணுமென்று மன்ருடு கிருன். .

இந்த உடம்போடே இருந்து தியான தாரண சமாதிகளைக் கண்டு இன்புற்றவன், இனி இவ் வுடம்பை விடும் காலம் எது?’ என்று எதிர்பார்த்துக் கொண்டிருப்பான். ஜீவன்முக்தர்கள் புளியம்பழமும் . ஒடும் போல இவ்வுடலில் இருந்தும் ஒட்டாமல் எந்த நிமிஷத்திலும் மரணத்திற்குத் தயாராய் இருப்பார்கள். மரணத்தைக் கண்டு அவர்களுக்குப் பயமே இல்லை; அதைப்பற்றிய நினைவே அவர்களுக்கு இருப்பதில்லை.

. சந்ததமும் வேதமொழி யாதொன்று பற்றினது - தான்வந்து முற்றுமெனலால் с

சகமீ திருந்தாலும் மரணம்.உண் டென்பதைச் - சதாதிஷ்டர் நினவதில் - .

என்று தாயும்ானவர் சொல்கிருர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மச்சுவீடு.pdf/72&oldid=610741" இலிருந்து மீள்விக்கப்பட்டது