70 மச்சு விடு
உண்மை யுணர்ந்தோர் கடவுள் உணர்ச்சி மிக்க போது அறிந்து வெளிப்படுத்திய, மறைமொழி பல கொண்டது வேதம், வேதத்தில் வரும் யாப்பிற்குத் தனியே இலக்கணமும் நிகண்டும் இருக்கின்றன. காவியங்களுக்கு உரிய இலக்கணத்தை வேதத்துக்குப் .ெ பா ரு த் தி ப் பார்த்தால் பல இடர்ப்பாடுகள் உண்டாகும். .
தமிழில் சித்தர் பாடல்கள் என்று வழங்கும் செய் யுட்கள் ஆரிஷ் வகையில் அடங்குவன. அவற்றிலே பல பாடல்கள் இடைப்பாட்டுக்களின் வகையைச் சார்ந்தன. ஓரளவு எதுகை மோனைகளுடன் பாவி னங்களின் இலக்கணத்துக்கு உட்பட்ட பாடல்களை அச்சிட்டு வெளியிட்டிருக்கிருர்கள், அவற்றை யல்லா மல் நாடோடியாக வழங்கும் வேதாந்தப் பாடல்கள் பல உண்டு.
'சித்தர் பாடல்கள்' என்று இப்போது வழங்கும் பாடல்கள் எல்லாம், பழங் காலத்தில் அஷ்டமாசித்தி களையும் பெற்று விளங்கினவரென்று சொல்லப்பெறும் சித்தர்களாலேயே பாடப்பட்டன என்று அபிமானத் தால் பலர் நினைக்கிறர்கள். இந்த நாட்டில் மெய்ஞ் ஞானம் படைத்த பெரியார்கள் கூறிய உபதேசங் களைக் கேள்வியுற்ற பல ஞான சாதகர்கள், அவற்றை உணர்ச்சி மிக்க காலங்களில் பாடலுருவத்தில் வெளி யிட்டார்கள். அவைகளே இந்தச் சித்தர் பாடல்கள். அவற்றை வெளிப்படுத்தியவர்கள் யார் என்பது நமக் குத் தெரியாது. இலக்கண இலக்கிய உலகிலேயே பல நூல்களுக்கு இன்னர் ஆசிரியரென்று தெரியாத போது, இந்தப் பாடல்களின் ஆசிரியர்களை யார்