மைேலயம்
வேதாந்த பரமான பாடல்களை இயற்றின பாட்டி ம்ார்களில் திருநெல்வேலி அக்கா என்பவர் ஒருவர். இலக்கண இலக்கியப் பயிற்சி இல்லாவிட்டாலும் இத். தகையவர்களுக்குக் கேள்வி ஞானம் மிகுதியாக இருக் கும். வாழ்க்கையில் நல்லொழுக்கமும் இந்திரிய நிக் கிரகமும் உடையவர்களாக அவர்கள் வாழ்ந்தார்கள். பழங்காலத்தில் கன்னியாக இருக்கும்போதே துறவு பூண்ட மணிமேகலையைப் போன்றவர்கள் இவர்கள். மணம் ஆலுைம் கன்னிமை கழியாததற்கு முன்பே கைம்மை வந்துவிட்டமையின் இவர்களும் கன்னி யிலே துறந்தவர்களுக்கு ஒப்பானவர்களென்றே சொல்லவேண்டும். துறவிகளுக்கு விதித்த பல வரை யறைகளை இவர்களிடத்தும் காணலாம். ஊணில் வரையறை, உறக்கத்தில் வரையறை, விரதங்களால் உடம்பை வருத்தி மெலியச் செய்தல், கூந்தலை மழித்தல், பலகால் நீராடல், வெள்ளாடை அணிதல், ஒராடையன்றிப் பிறிது புனையாமை, திருநீறு ருத்தி ராட்சம் அணிதல் ஆகிய இத்தகைய செயல்களை யுடைய இவர்கள் தங்கள் வாழ்நாளை எப்படியேனும் நல்ல நெறியிற் கழிப்பதற்கு ஏற்ற பழக்கங்களை உடையவர்களாக இருப்பார்கள். வேதாந்த சாஸ் திரங்களைப் படித்தல், கேட்டல், பிறருக்குச் சொல்லு தல் முதலிய காரியங்களில் ஈடுபடுவார்கள்.
திருநெல்வேலி அக்கா பாடிய பாடல்கள் பல உண்டு. ஜீவனுடைய சொரூபத்தையும் பரப்பிரம்மத்