78 டிச்சு வீடு
- இரவும் பகலும் அற்ற ஏகாந்த வெளியிலே
இருப்பதும் இன்பம் எடுப்பதும் துன்பம் கொடுப்பதும் எங்கும் நடப்பதும்
இல்லாமல் ஆச்சே! - அந்த நிலையில் இரவு தெரியாது, பகல் தெரியாது. எல்லோரும் வாழும் சகலாவஸ்தையாகிய நனவு இன்பப் போதையில் தன்னை இழந்தவர்களுக்கு வேருகி இருக்கும். எல்லாம் மறந்து இருட்டில் தூங்கு கிருேமே அந்த இருட்டும் அங்கே இல்லை. அங்கே துணை வேறு யாரும் இல்லை. அது வெறும் ஏகாந்த வெளி. அந்த வெளியில் நான் இருக்கிறேன? இல்லை. இன்பம் உண்டா? இல்லை. துன்பமும் இல்லை. நடத்தல் இல்லை; நடந்தாலும் நடப்பதாகத் தோன்றவில்லை. - -
அந்த ஆனந்தத்தை எப்படிச் சொல்வது?
எத்திசையும் முத்திசெய்யப்
பக்திசெய்யப் புத்தியற்று ஏகரலா னந்தாமிருதம்
5n》f劣仄ic亦址f Götbf50 யோகரளா னந்தாமிருத
ஜோதியாய்த் தழைத்தசுகம் வரவரப் பெருகுதே மஞேலயம்
வந்து வந்து தருகுதே! வார்த்தைகளினூடே அநுபவம் பேசுகிறது. சொல்லத் தெரியாமல் விழி சொக்கி வார்த்தைகளைச் சொல்வதுபோலப் பாட்டு இருக்கிறது. வார்த்தை களினூடே உணர்ச்சி பொங்குகிறது. ஆனல் வாக்கிய முடிபு, தக்க வார்த்தைகள், தர்க்க ரீதியில் விஷயத் தைச் சொல்லும் முறை ஆகியவை இந்தப் பாட்டில்