இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
மனுேலயம் 81
பால் நிற்கும் பரப்பிரம்மமே அந்தக் குருநாதன். அவன் மொழிந்த அருள் மொழியின்படி நடந்ததனல் இந்த ஆனந்தம் கிடைத்தது. . இருளான மாயைக்கும் அப்பால்
இகழ்ந்திடும் புத்திக்கும் அப்பால் பொருளான போதத்துக் கப்பால்
புகழ்ந்திடும் புத்திக்கும் அப்பால் குருவான வேங்கடேசர் கூறிடும் வழிமொழியைக் குறைந்திடக் குலம் அறுந்திடக் குணம் பறந்திடத் தேகம் மறந்திடக் குற்றமற்ற நித்யமுக்தன் சித்தமற்ற சத்யஞானன். அறிவும் குருவும் போல அருணன் உதயம்போலப் பரவியே ரெண்டாய்த் தோன்ரு நிருபமாய் நின்ற சுகம் வர வரப் பெருகுதே-மளுேலயம்
வந்து வந்து தருகுதே! . r இந்தப் பாட்டு நாடோடியாக வழங்குகிறது. பாரத நாட்டின் தனிச் சிறப்பாகிய ஞான நெறி பள்ளிக்கூடத்துக் கல்வி பரவாத இடத்திலும் பரவி யிருந்தது என்பதற்கு இத்தகைய பாடல்கள் அடை
யாளம்.