பள்விக்கூடத்தில் பிள்ளையார்
3
வைத்துப் போட்டதை உண்டுவிட்டுப் பள்ளிக் கூடத்துக்குப் புறப்படுகிறார். பள்ளிக்கூடத்தில் உட்காருவதற்குத் தடுக்கும், படிக்க ஏட்டுச்சுவடியும் கைக்கொண்டு புறப்படுகிறார்.
பிள்ளையாரிடம் சொல்வது போலப் பாட்டு இருக்கிறது. நீ இன்ன மாதிரியெல்லாம் செய்ய வேண்டும் என்று பிள்ளையாரை நோக்கிச் சொல்வதாக இருந்தாலும் விஷயம் பள்ளிக்கூடத்துக்குப் போகும் பிள்ளைகளுக்கு உரியதாக இருக்கிறது. பள்ளிக்கூடக் குழந்தைகள் அவ்வளவு பேருக்கும் பிரதிநிதியாகப் பிள்ளையாரை வைத்துச் சொல்வது போலப் பாட்டு வருகிறது.
★
- பிள்ளையாருக்கு என்ன என்ன நிவேதனம் ?
எள்ளு பொரித்த பொரியும்
இடித்த அவல்தனில் கலந்து
வள்ளிக் கிழங்கைத் திருத்தி
வாழைப்பழத்தை உரித்து
உள்ளிய பாகு திரட்டி
உண்ணும் படியே தருவோம்
கள்ளத் திருமால் மருகா
கணபதி சப்பாணி கொட்டாயே!
ஆறு தேங்காய் அவல் துணி
அதற்குத் தகுந்த எள் உருண்டை
நூறு குடலை மாம்பழமும்
நொடிக்கும் அளவில் அமுதுசெய்ய
வல்ல பிள்ளாய்
ஆடாய் பாடாய் சங்கீதம்