84 மச்சு வீடு
பிராரப்த கர்மத்தைக் கண்டு மனசினல்
பார்த்தே மகிழ்ந்திருப்பார்-அதில் ஆசக்தி வைத்தால் அநர்த்தம் வருமென்று
அறிந்த மகாத்மாக்கள்
பித்திரைப் போல ஜகத்தில் இருந்தவர்
பிரம்ம விசாரம்செய்வார்.
இந்தப் பாட்டைப் பாடியவர் இன்னர் என்று தெரியாது. முன்னே சொன்ன திருநெல்வேலி அக்கா என்று சொல்வார்கள். அவர் அத்வைதி. கடவுள் ஒரு வரே உயிர்களாகவும் மற்றப் பொருள்களாகவும் இருக் கிருர் என்ற கொள்கை உடையவர். "நானே கடவுள் ஆக இருக்கிறேன்" என்ற பொருளையுடைய 'அகம் பிரம்மாஸ்மி" என்ற வேதவாக்கியத்தை வற்புறுத்து பவர். அவர் கூறும் ஞான நிஷ்டர்கள் தாமரை இலைத் தண்ணிர் போலவும், ஒட்டில் ஒட்டாத புளியம் பழம் போலவும் இருப்பார்களாம். நாமே பிரம்மம்' என்று அநுபவத்திலே உணர்வார்களாம். பாமரர்களைத் தம் முடைய உபதேசத்தாலே தூயவராக்குவார்களாம்.
தாமரை இல்நீரைப் போலே ஜகம்.எங்கும்.
தான்மறைப் பாய் இருப்பார்
பூமியில் உள்ள புளியும் ஓடும் போலே
போகம் புஜித்திருப்பார் -
தாம்அந்தப் பிரம்மம் அகம்அஸ்மி என்று
தன்ருகப் பார்த்திருப்பார் -
արա, ரைத்தங்கள் வார்த்தைக காச்சொல்லிப்
பரிசுத்த ராக்கி வைப்பார்.